மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஒரு சராசரி இந்திய குடிமகனின் என்ன ஓட்டங்கள்.
 நேற்று ஒரு தோழி இடம் பேசி கொண்டிருக்கும்போது,சுகா வின் குஞ்சை பார்க்க ஆவல் என்று சொல்ல கேட்டு அதிர்ந்து விட்டேன்.(அவர் சொன்னது சுகா வின் நண்பர் குஞ்சு அவர்களை).  நடு இரவில் அம்மையாரின் மின் வாரியம் புண்ணியத்தில் தூக்கம் கலைந்து  இதை நினைத்து நன்றாக சிரித்து அந்த நேரத்திலும் பக்கத்தில் படுத்திருந்தவளிடம்(பொண்டாட்டி தான்) திட்டு வாங்கினேன்.கணவன்மார்கள் சிரித்தாலே இவர்களுக்கு தான் கோபம் வந்து விடுமே அது எப்படி நாம் ஒருத்தி இருக்கும் போது இவன் சிரிக்கலாம் என்று.இவ்வாறான இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு சுகா அவரின் நண்பர் திரு.குஞ்சு அவர்களை இப்பூவுலகிற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.