மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வி.பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி

ஒரு சராசரி இந்திய குடிமகனின் என்ன ஓட்டங்கள்.


 சமச்சீர் கல்வியை இன்னும் பத்து நாட்களில் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நடப்பு ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட இயலாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும், சமச்சீர் கல்வி விஷயத்தில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, 25 காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி சௌஹான் கூறியுள்ளார்.
பாஞ்சால், தீபக் வர்மா, சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதை அடுத்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை தமிழகத்தின் இந்த ஆண்டு வருவது உறுதிசெய்யப்படுள்ளது. கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நீடித்த இழுபறிக்கு முடிவு கிடைத்ததால், பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக