மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 30 மார்ச், 2013

கீச்சுகள்

ஒரு சராசரி இந்திய குடிமகனின் என்ன ஓட்டங்கள்.

1.பசி திண்ணும் வேளையில் நீண்டுச்செல்கிறது வீட்டிற்கான பாதை.
2.காலம் தவறாதவனின் காலம் காத்திருப்பிலேயே கழிகிறது.
    
    3.பிழைப்பை தேடி ஊரை விட்டு பெரும் பொதிகளோடு புறப்பட்டான் ஊரின் பெயரை மட்டும் தன்னுடனே சேர்த்துக்கொண்டு.

   4.அரசு பள்ளியில் பணிபுரியும்,முப்பதாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் ஆசிரிய நண்பன்,தனியார் பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம் வாங்க நீண்ட நெடிய வரிசையில் நின்று கொண்டிருக்கிறான் வெட்கமின்றி.
  5.உன் நிலவு முகத்தில் அவன் பதித்த முத்த கரையில் தெரிகிறது வெட்கம்.
  6.அம்மாவிடமிருந்து குழந்தை கைப்பற்றுபவைகளில் முக்கியமான ஒன்று அழுகை ஆயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக